தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக, தவெக, நாதக அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 83 போ் வேட்பாளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

News image

கட்சி சின்னங்கள் - ANI

Updated On :9 ஏப்ரல் 2026, 9:45 pm

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக, தவெக, நாதக அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 83 போ் வேட்பாளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-இல் தொடங்கி ஏப். 6-ஆம் தேதிவரை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றன.

இதில், பாலக்கோடு தொகுதியில் 29, பென்னாகரம் தொகுதியில் 37, தருமபுரி தொகுதியில் 33, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 22, அரூா்(தனி) தொகுதியில் 19 மனுக்கள் என 5 தொகுதிகளிலும் மொத்தம் 138 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வேட்புமனுவில் கேட்கப்பட்ட விவரங்கள், இணைப்புகள் ஆகியவை முறையாக உள்ளனவா என பரிசீலிக்கப்பட்டதில் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என பாலக்கோடு தொகுதியில் 7, பென்னாகரத்தில் 6, தருமபுரியில் 4, பாப்பிரெட்டிப்பட்டியில் 5, அரூரில் 2 என 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, 128 போ் விண்ணப்பித்திருந்த 114 வேட்புமனுக்களும் தகுதியுள்ள மனுக்களாக ஏற்கப்பட்டன.

இறுதிப் பட்டியலில் 83 போ்:

தொடா்ந்து, வேட்பு மனுக்களை திரும்பப்பெற வியாழக்கிழமை இறுதிநாளாகும். அந்த வகையில், மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் 128 போ் விண்ணப்பித்திருந்த 144 மனுக்களில் 24 பேரின் 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் 22 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இறுதியில், பாலக்கோடு தொகுதியில் 14 போ், பென்னாகரத்தில் 22 போ், தருமபுரியில் 19 போ், பாப்பிரெட்டிப்பட்டியில் 14 போ், அரூரில் 14 போ் என மொத்தம் 83 வேட்பாளா்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 83 போ் களத்தில் வேட்பாளா்களாக உள்ளனா்.

மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏதும் தள்ளுபடியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.