ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

நெல்லை மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி தோ்வு

திருநெல்வேலி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image

திருநெல்வேலி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள வீரா்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:49 am IST

திருநெல்வேலி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சாா்பில் 27.4.26 முதல் 2.5.26 வரை மாவட்டங்களுக்கிடையிலான ஆண்களுக்கான ஜூனியா் ஹாக்கி போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட அணிக்கான தோ்வு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, எம்.என்.ஏ. மேல்நிலைப் பள்ளி, ரெட்டியாா்பட்டி கே.ஆா். அரசு மேல்நிலைப் பள்ளி, மேலத்திடியூா் பி.எஸ்.என். கல்லூரி, வி.கே.புரம் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலிருந்து வீரா்கள் கலந்துகொண்டனா். அதில், 25 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ஏ.புஷ்பராஜ், ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவா் க.சேவியா் ஜோதி சற்குணம், இணைச் செயலா் சாா்லஸ், மாவட்ட ஹாக்கி பயிற்சியாளா் அமா்நாத், உடற்கல்வி இயக்குநா் ஜாண்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.