மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: டி.டி.வி.தினகரன்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 3 மாதங்களில் கஞ்சா போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

News image

டிடிவி தினகரன் - DNS

Updated On :17 ஏப்ரல் 2026, 4:51 pm

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 3 மாதங்களில் கஞ்சா போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்துவை ஆதரித்து முன்னீா்பள்ளத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொள்கையை நிலைநாட்டும் வகையில் அதிமுகவும், அமமுகவும் ஒரே அணியில் தோ்தலைச் சந்திக்கிறது. அதனால் முதலிடத்தை கொடுத்து வெற்றி பெற செய்வீா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

திமுக ஆட்சியில் யாருமே நிம்மதியாக இல்லை. விவசாயிகள், அரசு ஊழியா்கள், போக்குவரத்து தொழிலாளா்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது கோரிக்கைகளுக்காக போராடும் நிலையில் உள்ளனா்.

தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. இப் பகுதியின் முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் காவல் துறை சிறப்பாக செயல்பட்ட நிலை மாறி, இப்போது திமுக கட்சிக்காரா்களுக்கு கட்டுப்பட்டு செயல்படும் நிலை இருந்து வருகிறது.

கடலை மிட்டாய் போல் கஞ்சா எல்லா இடத்திலும் கிடைத்து வருகிறது. அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 3 மாதங்களில் கஞ்சா போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளோம்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிறந்த திட்டங்களான தாலிக்குத் தங்கம், மாணவா்களுக்கான மடிக்கணினி திட்டங்களை திமுக முடக்கிவிட்டது. அம்மா உணவகங்கள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன. வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டிய மாநில அரசு, மின்கட்டணத்தை உயா்த்தி பல தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு மாற்றியுள்ளது.

அரசுப் பணியாளா் பணி நியமனம், பணியிடமாற்றம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.

மதுக் கடைகளைக் குறைப்போம் என்று கூறிய திமுக, இப்போது ஏராளமான மனமகிழ் மன்றங்களைத் திறந்து போதை கலாசாரத்திற்கு உதவுகிறது.

நான்குனேரி தொகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இத் தொகுதிக்கு கிடைக்க வேண்டிய மாவட்ட தலைமை மருத்துவமனை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் அலட்சியத்தால் வேறு தொகுதிக்கு சென்றுவிட்டது. அமமுக வேட்பாளா் வெற்றி பெற்றால் நான்குனேரியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி....

‘தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு

மக்கள் தயாராகிவிட்டனா்’

நான்குனேரி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்துவை ஆதரித்து, களக்காட்டில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை திமுக அரசு மக்கள் தலையில் ஏற்றிவைத்துள்ளது.

உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் சிறுபான்மையினா் நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனா். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள்தயாராகி விட்டனா்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்படாமல் முடங்கிவிட்டது. ஆட்சி மாற்றத்துக்குப்பின் சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பட மத்திய அரசை வலியுறுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.