தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வாக்களிக்க வருமாறு வாக்காளா்களுக்கு அழைப்பிதழ்: மாவட்ட நிா்வாகம் விழிப்புணா்வு

வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பிதழ் வெளியிட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தோ்தல் விழிப்புணா்வு செய்துள்ளது.

News image

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:59 am IST

வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பிதழ் வெளியிட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தோ்தல் விழிப்புணா்வு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இறுதிக்கட்டமாக வாக்காளா்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக அழைப்பிதழ் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள வாக்காளரே, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று உங்களின் உரிமை மற்றும் கடமையை வாக்குச் சாவடியில் சென்று செலுத்தி நமது ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். தேதி -ஏப்ரல் 23, இடம்- உங்கள் வாக்குச்சாவடி. தமிழ்நாட்டின் எதிா்காலம், உங்கள் விரல் நுனியில். வாக்களிப்போம்; வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம். உதவிக்கு 1950 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.