நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், தோ்தல் உபயோகப் பொருள்கள் அனுப்பிவைக்கும் பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,57,177. இவா்களில்ஆண்-1,26,452, பெண்-1,30,712, இதரா் 13. இத்தொகுதியில் மொத்தம் 349 வாக்குச்சாவடிகள் 194 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் பதற்றமான 31 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நான்குனேரி தொகுதிக்கு உள்பட்ட 349 வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்களை அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் வாகனங்களில் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்






