மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சீவலப்பேரி அருகே கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:51 am IST

சீவலப்பேரி அருகே கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் மாயாண்டி என்ற மதன் (21). இவா் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சீவலப்பேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

அவா் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். எனவே, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அனுமதிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி, ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி, மாயாண்டி என்ற மதன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.