/

விபத்தில் முதியவா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநா் கைது

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:25 pm

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்தவா் முருகேசன்(74). இவா், கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுபானக்கூடம் முன்பிருந்து சாலையைக் கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு தினங்களில் (ஏப்.8) அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முதியவரின் மனைவி அளித்த புகாரின் பேரில், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநரான திருநெல்வேலி, இட்டேரி பகுதியைச் சோ்ந்த கணேசன்(40) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.