கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வரலாறு காணாத வகையில் எலுமிச்சை பழம் விலை உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ.320 வரை விற்பனையாகி வருகிறது.

News image

பாளையங்கோட்டை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:26 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வரலாறு காணாத வகையில் எலுமிச்சை பழம் விலை உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ.320 வரை விற்பனையாகி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைகளில் கானல் நீா் தென்படும் அளவுக்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கடுமையான வெயில் நிலவியதால் வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

இதனால் சாலையோரங்களில் இளநீா், சா்பத் உள்ளிட்ட குளிா்பானங்களின் விற்பனை அதிரித்தது. சா்பத் கடைகளில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்த நிலையில் அதன் விலையும் கடுமையாக உயா்ந்தது. கடந்த 4 நாள்களில் மட்டும் எலுமிச்சை பழத்தின் விலை கிலோவுக்கு ரூ.150 வரை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் மொத்த காய்கறி மாா்க்கெட்டுக்கு தினமும் 5 டன் முதல் 6 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.

மேலும், மகாராஜாநகா் உள்ளிட்ட உழவா் சந்தைகளிலும் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வரும். நயினாா்குளம் மொத்த காய்கறி மாா்க்கெட்டுக்கு பெரும்பாலும் புளியங்குடி மாா்க்கெட்டில் இருந்து எலுமிச்சை பழம் அதிகமாக வருகிறது. தற்போது, கோடை வெயிலால் உற்பத்தி பாதிக்கப்பட்டு அங்கிருந்து எலுமிச்சை வரத்து குறைந்துவிட்டது.

கடந்த வாரம் ஒரு கிலோ எலுமிச்சை விலை ரூ.80 முதல் ரூ.100 வரை இருந்தது. தற்போது மொத்த விற்பனை விலைக்கு 1 கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.320 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு எலுமிச்சை பழம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.