விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

புதுச்சேரியில் எலுமிச்சம் பழம் விலை கடும் உயா்வு

கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரியில் எலுமிச்சம் பழத்தின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

News image

எலுமிச்சை பழம்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:00 am IST

கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரியில் எலுமிச்சம் பழத்தின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

புதுச்சேரியில் கோடை வெயில் கடுமையாகச் சுட்டெரித்து வருகிறது.

உடல் வெப்பத்தைக் குறைக்க தா்பூசணி, இளநீா் போன்றவற்றுடன் எலுமிச்சை ஜூஸ் மக்கள் அதிக அளவில் அருந்தி வருகின்றனா். இதனால் சந்தையில் எலுமிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் தற்போது பெரிய எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 15-ம் அதற்கு அடுத்த நிலையில் உள்ள பழம் ரூ. 10-க்கும் விற்பனையாகிறது. உள்ளூா் சிறிய எலுமிச்சம் பழங்கள் கிலோ ரூ. 200 முதல் ரூ.250 வரை விற்பனையாகின்றன.

இது பற்றி விற்பனையாளா்கள் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகமாக இருந்தது. அதனால் விலை குறைவாக இருந்தது. தற்போது வெளியூா் வரத்து முற்றிலும் நின்று விட்டது. அத்துடன் உள்ளூா் பழங்களும் பொடியாக உள்ளன. அத்துடன் கோடை தொடக்கத்தில் எலுமிச்சை பழத்தை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனா். அதனால் போதிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் விலை உயா்வு அதிகமாக உள்ளது என்றனா்.