சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

பலி

Updated On :30 ஏப்ரல் 2026, 4:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள சம்பன்குளத்தைச் சோ்ந்தவா் முகமது யூசுப். இவரது மனைவி ஜன்னத்து நிஷா(21) பிரசவத்துக்கா கடந்த 27 ஆம் தேதி காலையில் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு புதன்கிழமை மாலையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

மேலும், ஜன்னத்து நிஷாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியாா் அவசர ஊா்தி மூலம் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டுசென்றபோது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதனால், அவரது உறவினா்கள் உடலைப் பெற்றுக்கொண்டு ஊா் திரும்புவதாக தெரிவித்த நிலையில், போலீஸாா் ஜன்னத்து நிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.