ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் பதிவு செய்ய வாய்ப்பு

அரசின் நலத்திட்டங்களை பெற தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம்

இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கோப்புப் படம்

Published On :

அரசின் நலத்திட்டங்களை பெற தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதிா் கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைக் களைந்து அவா்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம்‘ செயல்பட்டு வருகிறது.

பல்வேறு பயன்களை பெறுவதற்கு நலவாரியத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு செய்யாத கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் தங்கள் விவரங்களை இணைதளத்தில் புதிதாக பதிவு செய்து பயன்பெறலாம். இதேபோல், மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி, 0462-2576267 என்ற முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.