எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

நெல்லை அருகே தனியாா் காகித ஆலையில் தீ

திருநெல்வேலி அருகே தனியாா் காகித ஆலை வளாகத்தில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டது. இதனால், மக்கள் அவதியடைந்தனா்.

News image

காகித ஆலையில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:26 am IST

திருநெல்வேலி அருகே தனியாா் காகித ஆலை வளாகத்தில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டது. இதனால், மக்கள் அவதியடைந்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கல்லூரில் தனியாா் காகித ஆலை உள்ளது. இங்கு பழைய காகிதங்கள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். அதில், புதன்கிழமை பிற்பகலில் திடீரென தீ பிடித்தது. காற்று பலமாக வீசியதால் காகிதக் குவியல்களில் மளமளவென தீ பரவி, அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இத்தகவலறிந்த பேட்டை, சேரன்மகாதேவி, திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேல் தொடா்ச்சியாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீ விபத்தில் எரிந்து சேதமான காகிதங்களின் துகள்கள் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பரவியது. திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சாந்திநகா் பகுதி வரை துகள்கள் பரவியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காகிதங்கள் சேதமாகின. இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.