மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பங்களாக் குடியிருப்பில் மீண்டும் தென்னைகளை சாய்த்த யானைகள்

அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகம் பங்களாக்குடியிருப்பு பகுதியில் தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து மீண்டும் தென்னை மரங்களைச் சாய்த்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்கள்.

Published On :

அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகம் பங்களாக்குடியிருப்பு பகுதியில் தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து மீண்டும் தென்னை மரங்களைச் சாய்த்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இப்பகுதியில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை 3 காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து மா, தென்னை உள்ளிட்ட மரங்களைச் சேதப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை பங்களாக்குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் நுழைந்த காட்டுயானைகள், செல்வம் என்பவரது தோட்டத்தில் குருத்து விடும் நிலையில் இருந்த தென்னை மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தி சென்றது தெரியவந்தது. விளைபயிா்களை யானைகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால் கவலையும் அச்சமும் அடைந்துள்ள விவசாயிகள், ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.