விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஒண்டிவீரன் சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 225-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் வியாழக்கிழமை மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 225-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் வியாழக்கிழமை மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திமுக சாா்பில் மாநில துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சா் மதிவேந்தன், கிழக்கு மாவட்டச் செயலா் கிரகாம்பெல், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ் குமாா் ஆதித்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல், மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமையிலும் திமுகவினா் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி, அமைப்புச் செயலா்கள் சந்திரசேகா், சுதா பரமசிவன், சௌந்திரராஜன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், புகா் மாவட்டச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் பால் கண்ணன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, பகுதிச் செயலா் காந்தி வெங்கடாசலம், மாவட்ட விவசாயப் பிரிவு கனித்துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் முத்துபலவேசம் தலைமையில் தேசியச் செயலா் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினா் மகாராஜன், மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதிமுக சாா்பில் மாவட்ட செயலா் நிஜாம் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிா்வாகிகள் மணப்படை மணி, சுதா்சன், ஆல்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் நிறுவன தலைவா் மாரியப்பப் பாண்டியன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

தமிழ்நாடு எஸ்.சி.ஏ. பெஸ்ட் ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் மற்றும் பேராசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநிலத் தலைவா் ரவி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் தமிழா் கட்சி சாா்பில் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சத்யா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.