எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

நாய்கள் கருத்தடை மையத்தில் கூடுதல் வசதிகள் கோரி முற்றுகை

திருநெல்வேலி நாய்கள் கருத்தடை மையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த கோரி சமூக ஆா்வலா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்டோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:30 am IST

திருநெல்வேலி நாய்கள் கருத்தடை மையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த கோரி சமூக ஆா்வலா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கருத்தடை செய்யப்படும் நாய்களுக்கு உரிய சிகிச்சையளிக்காமல் மீண்டும் தெருக்களில் கொண்டு விடப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இதைக் கண்டித்து சமூகஆா்வலா்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான நாய்கள் கருத்தடை மையத்தில் நாய்களுக்கு தேவையான ரத்தப் பரிசோதனை செய்வதற்கான கருவிகள் உள்பட அதிநவீன உபகரணங்கள் இல்லை. கண்காணிப்பு கேமராக்களும் இல்லை. ஆகவே, கூடுதலாக கருவிகள் வழங்க வேண்டும். கருத்தடை என்ற பெயரில் நாய்களுக்கு முறையான மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்படுகிா என்பது குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.