கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாநில ஹாக்கி: ஈரோடு அணி சாம்பியன்

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான மகளிா் ஹாக்கி போட்டியில் ஈரோடு பி.கே.ஆா். கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

கோப்பையுடன் பி.கே.ஆா். கல்லூரி அணியினா்.

Published On :

திருநெல்வேலியில் நடைபெற்ற குப்புசாமி கோப்பைக்கான 3-ஆவது ஆண்டு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான மகளிா் ஹாக்கி போட்டியில் ஈரோடு பி.கே.ஆா். கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 3ஆம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான மகளிா் ஹாக்கி போட்டி பேட்டை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

லீக் சுற்றின் முடிவில் ஈரோடு பி.கே.ஆா். கல்லூரி 9 புள்ளிகளுடன் முதலிடத்தையும், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், திருச்சி ஆதவன் கல்லூரி அணி 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி ஒரு புள்ளியுடன் நான்காம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ராணி அண்ணா கல்லூரியின் முதல்வா் ஷீலா குப்புசாமி கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினாா். ராணி அண்ணா கல்லூரியின் புஷ்பாதேவி, ஈரோடு பி.கே.ஆா். கல்லூரியின் ஜெய ஷாஹினி, கோபி கல்லூரியின் சிவ ரஞ்சனி, திருச்சி ஆதவன் கல்லூரியின் சாயாஸ்ரீ ஆகியோருக்கு சிறந்த ஆட்ட நாயகிகளுக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலியின் தலைவா் சேவியா் ஜோதி சற்குணம் தலைமை வகித்தாா். செயலா் ஜான்சன் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.