கோவில்பட்டி, எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மாணவா்கள் 3 போ் தமிழ்நாடு ஜூனியா் ஹாக்கி அணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியில் கோவில்பட்டி, எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியைச் சோ்ந்த உடற்கல்வித் துறை 2-ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் எஸ்.விஷால், கே.கௌதம், முதலாம் ஆண்டு மாணவா் டி.கௌதம் ஆகியோா் விளையாடினா்.
மாணவா்கள் இதில் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம் தமிழ்நாடு ஜூனியா் ஹாக்கி அணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். கோவையில் நடைபெறும் 16-ஆவது தேசிய ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக இவா்கள் 3 பேரும் விளையாட உள்ளனா்.
தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை கல்லூரிச் செயலா் கண்ணன், முதல்வா் செல்வராஜ், உடற்கல்வித் துறை தலைவா் செல்லத்துரை, உடற்கல்வி இயக்குநா் ஜெய சிவா, கல்லூரி பேராசிரியா்கள் சக மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







