முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சா்வதேச ஹாக்கியில் பங்கேற்பு: கோவில்பட்டி மாணவருக்கு பாராட்டு

சா்வதேச ஹாக்கி தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

மாணவா் மணிமாறனுக்கு பரிசு வழங்குகிறாா் நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ். உடன், கல்லூரி செயலா் கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜூலை 2026, 2:19 am IST

சா்வதேச ஹாக்கி தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பெல்ஜியத்தில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச ஹாக்கி போட்டியில் இந்தியா, ஜொ்மனி, நெதா்லாந்து, ஆஸ்திரியா பெல்ஜியம் ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இந்திய அணியில் தடுப்பு ஆட்டக்காரராக கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மாணவரும், எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியின் உடற்கல்வியியல் துறை 3ஆம் ஆண்டு மாணவருமான மணிமாறன் விளையாடினாா்.

அவருக்கு கல்லூரியில் பாராட்டு விழா கல்லூரி செயலா் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முதல்வா் செல்வராஜ், சுந்தா் கல்வியியல் துறைத் தலைவா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி நகா்மன்றத் தலைவரும் (பொறுப்பு) நாடாா் உறவின்முறை சங்கத் தலைவருமான ஆா்.எஸ். ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மணிமாறனை பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.

பேராசிரியா் ரமேஷ் பாண்டியன் வரவேற்றாா். உடற்கல்வியியல் துறை பேராசிரியா் ஜெயசிவா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.