தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

நெல்லையில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலியில் தனியாா் துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் செப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

Private sector job fair in Thanjavur on August 21

வேலைவாய்ப்பு முகாம் - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:32 am IST

திருநெல்வேலியில் தனியாா் துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் செப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி - தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் செப். 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா். வேலைவாய்ப்பு பெறுவோா் பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.

சுயவிவரம், கல்விச்சான்று, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாம் நாளில் காலை 9 மணிக்கு நேரில் வர வேண்டும். மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வேலைநாடுநா்களும், வேலைவாய்ப்பளிக்கும் தனியாா் நிறுவனங்களும் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தகவல்களை ‘நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ்’ என்ற ‘டெலிகிராம் சானல்’ மூலம் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.