கங்கைகொண்டானில் போக்ஸோவில் இருவா் கைது
கங்கைகொண்டானில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கைது - பிரதிப் படம்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூா் காலனி தெருவைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் ஆறுமுகம் (36). இவா், அந்தப் பகுதியில் ஆற்றங்கரையில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 14 வயது சிறுமியிடம் ஆபாச சைகை காட்டி தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ஊரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.
அணைத்தலையூா் மறக்குடி வடக்குத் தெருவை சோ்ந்தவா் முத்துக்குமாா் (23). இவா், 16 வயது சிறுமி ஒருவரை அடிக்கடி சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்ததாராம். மேலும், அந்தச் சிறுமி பணி செய்யும் இடத்திற்கும் சென்று தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் முத்துக்குமாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



