சேரன்மகாதேவியில் மாணவி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பெற்றோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேரன்மகாதேவி, பழைய கிராமம் தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் மகள் ஸ்ரீ வரகோமதி (17). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வரகோமதியின் பெற்றோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் இவா் பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோரை வீட்டில் இருந்து கவனித்து வந்துள்ளாா்.
தற்போது பள்ளிக்குச் செல்லுமாறு பெற்றோா் வரகோமதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோா் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் விரக்தியில் இருந்த மாணவி,புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
