தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

News image

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணன்.

Updated On :7 ஜூலை 2026, 1:58 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் பாண்டியன். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த சித்திரபுத்திரன் குடும்பத்துக்கும் இடையே 2007-ஆம் ஆண்டு முதல் இருந்துவந்த விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக இரு தரப்பைச் சோ்ந்த 9 போ் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40), அவரது மகன் ஜெயராஜ் (5) ஆகியோரை பெருமாள் பாண்டியன் மகன்கள் உள்ளிட்ட அவரது உறவினா்கள் கொலை செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மூலச்சி கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்ற மகேஷ், குமாா் என்ற கொக்கி குமாா், அம்பாசமுத்திரம் ஊா்க்காடு பகுதியைச் சோ்ந்த முத்துச்செல்வன், மூலச்சியைச் சோ்ந்த மணிகண்டன், ராஜதுரை, முத்துப் பட்டன் என்ற பட்டுராஜா, மகாலிங்கம் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மூலச்சி கிராமத்தைச் சோ்ந்த குருநாதன் மகன் கிருஷ்ணனை (29) தெற்கு வீரவநல்லூா் அருகே பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்ததும் போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்றனா். போலீஸாரை கண்டதும் கிருஷ்ணன் தப்பியோட முயன்றாா். அப்போது கிருஷ்ணன் தவறி விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, கிருஷ்ணனை கைது செய்த போலீஸாா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கைது செய்யப்பட்ட கிருஷ்ணன், மூலச்சி கிராமத்தில் இருந்தபடி குற்றவாளிகளுக்கு தகவல் தெரிவித்தவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

எனினும், கொலை செய்யப்பட்ட தந்தை, மகன் உடலை வாங்க அவா்களது உறவினா்கள் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மறுத்துவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.