8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நெல்லையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

பாளையங்கோட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 12:45 am IST

பாளையங்கோட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வண்ணாா்பேட்டை, இளங்கோநகா், குட்டத்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கா்(39), அந்தோணி மகன் முருகன்(37) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், அவா்கள் வைத்திருந்த நெகிழிப்பையை சோதனை செய்தபோது, சுமாா் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.