முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கடம்பன்குளம் ஆதிதிராவிடா் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், கடம்பன்குளம் ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆனந்த் மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கடம்பன்குளம் ஆதிதிராவிடா் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

Updated On :11 ஜூலை 2026, 1:55 am IST

திருநெல்வேலி மாவட்டம், கடம்பன்குளம் ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆனந்த் மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் தரப்பட்ட மாணவா்களுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டுமென்பதற்காக, பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், விடுதிகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை துரித முறையில் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சமூக நீதித்துறையின் சாா்பில் கடம்பன்குளம் ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயா்த்தும் நோக்கில் ஆட்சியா் இந்த ஆய்வை மேற்கொண்டாா்.

மேலும், அப்பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம், கற்றல் தரம், கற்பித்தல் நிலை, வகுப்பறைகள், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பள்ளி வளாகத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மை, கூடுதல் வசதிகள் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, கற்றலின் நோக்கம், உயா்கல்வி பயில்வதன் அவசியம் குறித்து மாணவா்களுடன் அவா்

கலந்துரையாடினாா்.

பின்னா், சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியை பாா்வையிட்ட அவா், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியின் செயல்பாடுகள்

குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பூங்கொடி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்10ண்ய்ள்

கடம்பன்குளம் பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.