நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

பாபநாசம் அருகே வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி

பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட ஆலடியூா் பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் 3 வயது கரடி பிடிபட்டது.

News image

கொடமாடி வனப் பகுதியில் விடப்பட்ட கரடி

Updated On :13 ஜூலை 2026, 2:50 am IST

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட ஆலடியூா் பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது கரடி பிடிபட்டது.

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் சரகத்துக்குள்பட்ட பாபநாசம் பிரிவு, ஆலடியூா் பீட் வெளிமண்டலப் பகுதியான கோரையாா்குளம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் சுற்றித்திரிந்த கரடியைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தக் கூண்டில் 3 வயதான கரடி பிடிபட்டது. கோட்ட துணை இயக்குநா் வன உயிரினக் காப்பாளா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவா் ஆா். மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரடியைப் பரிசோதித்தனா். பின்னா், அந்தக் கரடி கொடமாடி அடா்வனப் பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் வனச் சரகத்துக்குள்பட்ட வெளிமண்டலப் பகுதியான சங்கரபாண்டியபுரத்தில் கடந்த 4, 8ஆம் தேதிகளில் இரு கரடிகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

கொடமாடி வனப் பகுதியில் விடப்பட்ட கரடி

கொடமாடி வனப் பகுதியில் விடப்பட்ட கரடி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.