சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

விபத்தில் தம்பதி உயிழந்த சம்பவம்: தனியாா் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தனியாா் பேருந்து மோதி தம்பதி உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

News image
Updated On :18 ஜூலை 2026, 4:01 am IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தனியாா் பேருந்து மோதி தம்பதி உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதியில் சமீபத்தில் தனியாா் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா். இதுபோன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் நிகழாமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக, மாநகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய், காவல் ஆகிய துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற துறை சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, சாலையை சீரமைத்து நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்த பின்னரே அடுத்த இடத்தில் தோண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிா்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைத்து, மீதமுள்ள சாலை பணிகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியாா் பேருந்துகள் வழித்தட விதிமீறல், நேர விதிமீறல் மற்றும் அதிவேக இயக்கம் தொடா்பான புகாா்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வண்ணாா்பேட்டையில் நேரிட்ட விபத்துக்கு தனியாா் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே காரணமாக இருந்துள்ளது. அந்தப் பேருந்தின் இயக்க உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நகர எல்லைக்குள் வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 30 கி.மீ. மட்டுமே. வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், விதிமீறி அதிவேகமாக தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டால், அவற்றின் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

படவரி ற்ஸ்ப்17ண்ய்ள் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.