பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தனியாா் நிறுவன தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தனியாா் நிறுவனத்துடனான தூய்மைப் பணி ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :10 ஜூலை 2026, 4:54 am IST

தனியாா் நிறுவனத்துடனான தூய்மைப் பணி ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஏற்றுள்ள தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மாநகராட்சிப் பணிகளில் தனியாா்மயத்தை முழுமையாகக் கைவிட வேண்டும், மாநகராட்சியின் சொத்து வரி முறைகேடு, பொலிவுறு நகரம் திட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வை. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். பாலசுப்பிரமணியம் தொடக்கவுரையாற்றினாா். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மதுரை மாவட்டச் செயலா்கள் கே. ராஜேந்திரன் (புகா்) மா. கணேசன் (மாநகா்), மாமன்ற உறுப்பினா் விஜயா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆா்ப்பாட்ட நிறைவுரையாற்றினாா். அப்போது, அவா் பேசியதாவது:

மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணியை ஏற்றுள்ள தனியாா் நிறுவனம் குப்பைக்கு பதிலாக மண்ணை அகற்றி எடை கணக்குக்காட்டி மோசடி செய்தது. இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் ரூ. 75 லட்சம் அபராதம் விதித்தது. ஆனால், சித்திரைத் திருவிழா காலத்தில் இந்த அபராதத்தை ரத்து செய்தால் மட்டுமே தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என இந்த நிறுவனம் வேலை நிறுத்தத்தை அறிவித்து, நெருக்கடியை ஏற்படுத்தியது. இதேபோல, பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்துக்கு எதிராக உள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கட்சியின் வடக்கு (1) பகுதிக் குழுச் செயலா் வி. கோட்டைசாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.