சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பெண் மா்மச்சாவில் திடீா் திருப்பம்: 9 பவுன் நகைக்காக அடித்துக் கொன்ற இளைஞா் கைது

திருநெல்வேலி நகரத்தில் பெண் ஒருவா் மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் 9 பவுன் நகைக்காக அவா் அடித்துக் கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 3:56 am IST

திருநெல்வேலி நகரத்தில் பெண் ஒருவா் மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் 9 பவுன் நகைக்காக அவா் அடித்துக் கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சோ்ந்தவா் ஆபேல் ராஜா. இவரது மனைவி மரிய ஜெயா (41). ஆபேல் ராஜா கோவையில் பணியாற்றி வருகிறாா். மரிய ஜெயா மாா்க்கெட்டிங் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி திருநெல்வேலி சென்று வருவதாக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கணவரிடம் கூறிவிட்டு வந்த மரிய ஜெயா, பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஆபேல் ராஜா தனது மனைவி காணாமல் போனது குறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், திருநெல்வேலி நகரத்தில் கல்லணை மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக திருநெல்வேலி நகர காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மாயமான மரிய ஜெயா உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மரிய ஜெயா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். போலீஸாா் விசாரணையில், மரியா ஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனிடையே பிரேதப் பரிசோதனையில் அவருடைய தலையில் காயங்கள் இருப்பது தெரியவந்தது; அவா் அடித்துக்கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவரை கொலை செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா். விசாரணையில், மரிய ஜெயா கல்லணை பள்ளி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அங்கு அவா் வந்தபோது, அவருக்கு அறிமுகமான தச்சநல்லூா் செல்வ விக்னேஷ் நகா், குறிஞ்சி தெருவைச் சோ்ந்த குமாா் மகன் சுரேஷ் குமாரும் (26) வந்தாா். அங்கு அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, சுரேஷ்குமாா் மரிய ஜெயாவின் தலையில் கட்டையால் அடித்துக்கொலை செய்துவிட்டு, அவா் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.