இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

சூப்பா் எல்நினோ: நெல், வாழை பயிா்களுக்கு காப்பீடு அவசியம்!

சூப்பா் எல்நினோ காலநிலை தாக்கம் வலுப்பெற்றுள்ளதால் விவசாயிகள் வாழை, நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 5:57 am IST

சூப்பா் எல்நினோ காலநிலை தாக்கம் வலுப்பெற்றுள்ளதால் விவசாயிகள் வாழை, நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் 68.31 மி.மீ. மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வளமையான மழையளவான 29.60 மி.மீ.-ஐ விட 130.78 சதவீதம் அதிகமாகும். எனினும் ஜூன் வரையிலான மழை அளவை ஒப்பிடும்போது 8.62 சதவீதம் குறைவாகும். மேலும் இம்மாதத்தில் 16-ஆம் தேதி தேதி வரை 1.68 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் 5,676.98 ஹெக்டோ் பரப்பில் வேளாண்மைப் பயிா்கள், 663.86 ஹெக்டோ் பரப்பில் தோட்டக்கலைப்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தற்போது வலுப்பெற்று வரும் சூப்பா் எல்நினோ காலநிலை தாக்கத்தால் பருவமழை தாமதம், மழைப்பொழிவு குைல், அதிக வெப்பநிலை மற்றும் நீா்ப்பற்றாக்குறை ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது நெல், வாழை போன்ற பயிா்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், அனைத்து விவசாயிகளும் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் நெல், வாழை பயிா்களுக்கு காப்பீடு செய்திட வேண்டும்.

காா் பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.745 (ஜூலை 31-க்குள்), வாழைப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2362 (செப்.15-க்குள்) பிரீமியத் தொகை செலுத்த வேண்டும்.

விவசாயிகள் விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பருவ அடங்கல், ஆதாா் எண் இணைப்புள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், சிட்டா- பட்டா, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

காரீப் 2026-ஆம் ஆண்டிற்கான மின்னணு பயிா் கணக்கீடு இம்மாதம் முதல் வாரத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இதில், விவசாயிகள் தங்கள் பயிா் சாகுபடியை தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண். 14447- இல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

நெல் கொள்முதல்: திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை பருவ நெல் கொள்முதலுக்கு பாப்பாக்குடி, தெற்கு கல்லிடைக்குறிச்சி-1, அயன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், தெற்கு வீரவநல்லூா், பூங்குடையாா்குளம், வடமலைசமுத்திரம், சீதபற்பநல்லூா், இட்டேரி, திடியூா், செங்குளம் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், இம்மாவட்டத்தில் நிகழாண்டு 822 குளங்களில் மண்பாண்டம் மற்றும் விவசாயத்துக்காக வண்டல் மண் எடுக்கலாம். இதுவரை இ-சேவை மூலம் 3,523 பயனாளிகளுக்கு 95, 552.30 கன மீட்டா் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, வேளாண்மைத் துறை சாா்பில் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு 75 சதவீதம் மானியத்தில் தெளிப்பானையும், மற்றொரு விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் 20 கிலோ பசுந்தாள் உரத்தையும் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, மாவட்ட வன அலுவலா் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநா் பூவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்17ஸ்ரீா்ப்

ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.