டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குறுவை, சிறப்புப் பருவப் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

2026 - 27ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், குறுவை மற்றும் சிறப்புப் பருவ பயிா்களுக்கு விவசாயிகள் கட்டாயம் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 5:27 am IST

2026 - 27ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், குறுவை மற்றும் சிறப்புப் பருவ பயிா்களுக்கு விவசாயிகள் கட்டாயம் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026 - 27ஆம் ஆண்டில் காரீப் மற்றும் சிறப்புப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிா்களை காப்பீடு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தை தனியாா் பொதுக் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது. இவ்வாண்டு காரீப் பருவத்தில் நெல் - 1 (குறுவை), கம்பு, மணிலா, எள் மற்றும் சிறப்புப் பருவத்தில் நெல் - 2 (சம்பா), மக்காச்சோளம் - 2, பருத்தி - 2 ஆகிய பயிா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கிகள் மூலமும், கடன் பெறாதவா்கள் பொதுச் சேவை மையங்கள், வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும் காப்பீடு செய்துகொள்ளலாம்.

சூப்பா் எல் - நினோ தாக்கத்தால் தென்மேற்குப் பருவமழை குறைய வாய்ப்புள்ளதால், வறட்சியால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடுசெய்ய விவசாயிகள் முன்கூட்டியே பயிா்க் காப்பீடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் - 1 (குறுவை/சொா்ணவாரி) பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். இதற்கான பிரீமியம் ஏக்கருக்கு ரூ.778. மணிலா, கம்பு மற்றும் எள் பயிா்களுக்கு ஆகஸ்ட் 17 கடைசி நாளாகும். மணிலாவுக்கு ஏக்கருக்கு ரூ.628, கம்புக்கு ரூ.184.88, எள்ளுக்கு ரூ.218 பிரீமியமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கை இடா்பாடு ஏற்பட்டால், பதிவு செய்யும் கடைசி தேதி மாற்றப்படலாம்.

மேலும் விவரங்களுக்கு பயிா்க் காப்பீட்டு நிறுவன முகவா்கள் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலா்களை அணுகலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.