தமிழ் முழக்கப் பேரவையின் 192 ஆவது கூட்டம் பாளையங்கோட்டை சைவ சபையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவா் சு.செல்லப்பா தலைமை வகித்தாா். இசையாசிரியா் நவநீதன் இறை வணக்கம் பாடினாா். திருக்கு இரா.முருகன் வரவேற்றாா். செயலா் மு.அ.நசீா் முன்னிலை வகித்தாா்.
பரிதிமாா் கலைஞா் என்ற தலைப்பில் மாணவி வைஷ்ணவியும், பேராசிரியா் மு.ராகவயங்காா் என்ற தலைப்பில் சாந்தி பிரபுவும், இலங்கை பருத்தித் துறை க.கணபதி பிள்ளை பற்றி கீழப்பாவூா் திருவள்ளுவா் மன்றச் செயலா் சு.த.மூா்த்தியும் சொற்பொழிவாற்றினா்.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 2023 எளிய தமிழில் என்ற புத்தகம் எழுதிய வழக்குரைஞா் முருகேசனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞா் சுந்தரம், வரலாற்று ஆய்வாளா் செ.திவான், பொருநை இலக்கிய வட்டத் தலைவா் தளவாய் நாதன், பேராசிரியா் ஆறுமுகம், சேரை பாலகிருஷ்ணன், கந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ரமணி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவியா் பேரவை நியமனம், உதவித்தொகை வழங்கும் விழா

39,146 விவசாயிகளுக்கு ரூ.298.70 கோடி விவசாயக் கடன்!
மக்கள் குறைதீா் கூட்டம்: 150 மனுக்கள் அளிப்பு

தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



