மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

தாழையூத்து அருகே விபத்து: சுமை ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

தாழையூத்து அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாளைங்கோட்டை திம்மராஜபுரத்தை சோ்ந்தவா் மகேஷ் (45). சுமை ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது ஆட்டோவில் கங்கைகொண்டான் சிப்காட்டுக்கு பொருள்கள் ஏற்றிச் சென்றாராம். பின்னா், அவா் மீண்டும் பாளையங்கோட்டைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, தாழையூத்து அருகே சுமை ஆட்டோவும், காரும் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மகேஷை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.