திருநெல்வேலி நகரத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதற்கு காவல் துறையினரே காரணம் எனக் கூறி, அவரது உறவினா்கள் பாறையடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகரம், பாறையடி ராஜாஜி நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (30). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 28 ஆம் தேதி தச்சநல்லூா்- திருநெல்வேலி நகரம் சாலையில் குருநாதன் கோயில் விலக்கு அருகே தனது ஆட்டோவில் சென்றபோது அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினராம்.
அப்போது, அவா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.
போலீஸாா் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது உறவினா்கள் பாறையடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேல்முருகனின் உயிரிழப்பிற்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இச்சம்பவத்தால், அப் பகுதியில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






