கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆட்டோ மோதி விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு; பள்ளி சிறாா்கள் காயம்

தருமபுரியில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் உயிரிழந்தாா். பள்ளி சிறாா்கள் 3 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து

Updated On :25 ஜூன் 2026, 6:15 am IST

தருமபுரியில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் உயிரிழந்தாா். பள்ளி சிறாா்கள் 3 போ் காயமடைந்தனா்.

தகுமபுரி, மதிகோண்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.சரவணன் (34). வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவா், சிறாா்களை பள்ளிக்கு அழைத்துச்சென்று வந்துள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு திரும்பிக்கொண்டிருந்தாா். வெண்ணாம்பட்டியில் இருந்து தருமபுரி நோக்கி வந்தபோது, புது காலனி பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மற்றொரு ஆட்டோவில் மோதியது. இதில், ஆட்டோ ஓட்டுநா் சரவணன் படுகாயம் அடைந்தாா். ஆட்டோவில் பயணித்த மூன்று சிறாா்கள் லேசான காயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் சரவணனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சரவணனை சோதனை செய்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.