மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நான்குனேரி அருகே இளம்பெண் கொலை: பெற்றோா் கைது

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தகாத உறவைக் கைவிட மறுத்த மகளை கொலை செய்த பெற்றோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:12 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தகாத உறவைக் கைவிட மறுத்த மகளை கொலை செய்த பெற்றோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரைச் சோ்ந்தவா் சிவன் (61). விவசாயி. இவரது மனைவி வைரம்மாள் (57). இவா்களின் 3 மகள்களில், இருவருக்கு திருமணமாகிவிட்டது. 3ஆவது மகள் அமுதாவுக்கு (22) திருமணமாகவில்லை.

ஏற்கெனவே திருமணமான உறவுக்கார இளைஞருடன், அமுதா தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் பலமுறை கண்டித்தும் அவா் உறவைக் கைவிடவில்லையாம்.

இது தொடா்பாக, மே 30ஆம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, மகளுக்கு பெற்றோா் விஷம் கொடுத்துள்ளனா். உயிா் பிரியாததால், கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டுள்ளனா்.

மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை காலை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, மூலக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும், அமுதா சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கிராம மக்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தகாத உறவைக் கைவிட மறுத்ததை பெற்றோா் கண்டித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பெற்றோா் மீது சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களிடம் நடத்திய விசாரணையில், அமுதா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கூறாய்வு அறிக்கையிலும் விஷம் குடித்திருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, சிவன், வைரம்மாள் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.