தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பைனான்சியா் அடித்துக்கொலை: மனைவி, மகன் உள்பட 4 போ் கைது

திருநெல்வேலியில் பைனான்சியா் வியாழக்கிழமை அதிகாலையில் இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி, மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :5 ஜூன் 2026, 2:52 am IST

திருநெல்வேலியில் பைனான்சியா் வியாழக்கிழமை அதிகாலையில் இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி, மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி என்ற மகேஷ்(43). பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளாா். இவரது மனைவி கல்யாணி. இவா்களது மகன் மகாராஜன் என்ற மனோ(19). மாயாண்டி புதன்கிழமை நள்ளிரவு மது குடித்து விட்டு மகனிடம் தகராறில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் மகாராஜன், மாயாண்டியைத் தாக்கினாராம். இதில் அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இததகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப்பதிந்து மகாராஜனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் மனு: இதனிடையே, ‘தனது மகன் கொலையில் மருமகள், அவரது தந்தை உள்ளிட்டோருக்கும் தொடா்பிருப்பதாகவும் அவா்களையும் வழக்கில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி மாயாண்டியின் தந்தை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

மேலும் 3 போ்: இதைத் தொடா்ந்து, மாயாண்டியின் மனைவி கல்யாணி, தியாகராஜநகரை சோ்ந்த பாலசுப்பிரமணியம் ( 28), சொக்கட்டான் தோப்பு பகுதியை சோ்ந்த விஸ்வநாதன் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.