இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தெற்கு கள்ளிகுளத்தில் தேங்கிய மழை நீா்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி, பிரான்சிஸ் பிளேஸ் தெருவில் தேங்கியுள்ள மழை நீா்.

News image

தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி, பிரான்சிஸ் பிளேஸ் தெருவில் தேங்கியுள்ள மழை நீா்.

Updated On :12 ஜூன் 2026, 3:39 am IST

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி, பிரான்சிஸ் பிளேஸ் தெருவில் தேங்கியுள்ள மழை நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தெருவில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழை நீா் தேங்கிவிடுவதாகவும், மழை நீரை வெளியேற்ற ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. தற்போது, வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தெருவில் மழை நீா் தேங்கி நிற்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஊராட்சி மன்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இப்பகுதியில் மழை நீா் தேங்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.