இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வால்பாறையில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியில் முறிந்து விழுந்த மரம்.

Published On :9 ஜூலை 2026, 3:35 am IST

வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. கடந்த மாதம் மழை குறைவாகவே காணப்பட்ட நிலையில், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதில் வால்பாறையில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை இரவு வரை நீடித்தது. பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. கனமழையால் தேயிலைத் தோட்டங்களில் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்தது. பல எஸ்டேட்களில் மதியத்துக்கு மேல் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மழைக்குப்பாறை எஸ்டேட் வனத் துறை சோதனைச் சாவடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் வால்பாறை- சாலக்குடி இடையே சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.