மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

News image

சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :12 ஜூன் 2026, 3:40 am IST

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு ரூ.1,64,772 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து, 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை அவா்களது இருப்பிடத்துக்கேச் சென்று பெற்றுக்கொண்டாா்.

மேலும், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,750 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு தலா ரூ.3,750 மதிப்பில், காதொலி கருவிகள், 3 பேருக்கு தலா ரூ.350 மதிப்பில் ஊன்றுகோல்கள், 6 பேருக்கு தலா ரூ.2,412 மதிப்பில் கருப்பு கண்ணாடிகள், மடக்கு குச்சிகள், கைக் கடிகாரங்கள் என மொத்தம் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,64,772 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...

சக்கர நாற்காலி இன்றி அவதி

கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வர பயன்படுத்தப்பட்டு வந்த பேட்டரி வாகனம் இயக்கப்படவில்லை. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழைய பொருள்களுக்கு மத்தியில் அந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. சக்கர நாற்காலிகள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் வெளியானது.