தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

நெல்லையில் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலியில் ஆனி தோ்த் திருவிழா தொடங்க உள்ளதையொட்டி, ரத வீதிக்குள் நுழையும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

News image

திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் இருந்து ரத வீதிக்குள் நுழையும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு.

Updated On :14 ஜூன் 2026, 2:18 am IST

திருநெல்வேலியில் ஆனி தோ்த் திருவிழா தொடங்க உள்ளதையொட்டி, ரத வீதிக்குள் நுழையும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனி தோ்த் திருவிழா இம் மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து திருவிழா நாள்களில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவது வழக்கம். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம், இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தோ்த் திருவிழாவையொட்டி கோயில் முன்பு அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதால், ரத வீதிக்குள் வாகனங்கள் நுழைவதில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

சுவாமி நெல்லைப்பா் நெடுஞ்சாலையில் இருந்து ரத வீதிக்குள் நுழையும் பகுதியில் பெரிய கட்டையால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் நுழைய முடியாது.

சொக்கப்பனை முக்கு, பாரதியாா் தெரு வழியாக வாகையடி முனை பகுதியில் ரத வீதியை வாகனங்கள் சென்றடையலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.