/
திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு, மாநகா் நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.
முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், முன்னோடி வங்கி அதிகாரி குமாா், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலா் செல்வின், உதவி பொறியாளா் (திட்டம்) நுதுன் விக்னேஷ், பொது சுகாதார பிரிவு கண்காணிப்பாளா் பழனிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்11ப்ா்ய்ங்
முகாமில் கடனுதவி பெற்ற வியாபாரிகள்.






