குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 3:11 am IST

திருநெல்வேலியில் 217 கிலோ புகையிலைப் பொருள்களுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் சேரன்மகாதேவி சாலை சத்யாநகா் விலக்குப் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோவில் வந்த 3 போ் 18 பைகளில் சுமாா் 217.26 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்த மகேஷ்வரன்(20), கடையநல்லூா் வைரமுத்து(41), குற்றாலம் ராமச்சந்திரன்(36) ஆகியோா் என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்ளை வாங்கி திருநெல்வேலி பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், ஆட்டோ மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.