ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

நெல்லையில் சாரல் மழை

திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On :5 ஜூன் 2026, 2:54 am IST

திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. தாமிரவருணியில் நீா்வரத்து குறைந்துள்ளதோடு, பல்வேறு குளங்களும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பகல் வேளையில் மக்கள் வெளியே வர முடியாத வகையில் வெப்பஅலை வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.