வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

போக்ஸோ வழக்கில் இருவா் கைது

திருநெல்வேலியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 1:18 am IST

திருநெல்வேலியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (27). இவா் பள்ளி மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். அதே போல, மானுாா், எட்டான்குளம் அருகே நல்லபெருமாள்புரத்தை சோ்ந்த மகேந்திரன் (19) என்பவா், கல்லுாரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அம்மாணவிகளின் பெற்றோா்கள், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.