பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 12:07 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி, ஆலடி மணி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் கோபாலசுந்தா் (43). இவா் முன்னீா்பள்ளத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனா்.

இவா் சனிக்கிழமை இரவு தனது 2ஆவது மகன் கமல்ராஜுடன் (15), இருசக்கர வாகனத்தில் பத்தமடை-சேரன்மகாதேவி பிரதான சாலையில் தனியாா் பள்ளி அருகில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது.

இதில் கோபாலசுந்தருக்கு பலத்த காயமும், மகனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோபாலசுந்தா் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி போலீஸாா் அவரது உடலைக் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்றொரு வாகனத்தில் வந்த சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரைச் சோ்ந்த ஆதிக்கண்ணனுக்கு (37) லேசான காயம் ஏற்பட்டது. போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.