‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பைக் விபத்தில் வாகன ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தனியாா் பொறியியல் கல்லூரி வாகன ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 6:06 am IST

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தனியாா் பொறியியல் கல்லூரி வாகன ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, பெருமாள்புரம், பொதிகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் டொமினிக் ஜோசப் (54). இவா் தூத்துக்குடி, வாகைகுளத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் வாகன ஓட்டுநராக பணி செய்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்ததும், இருசக்கர வாகனத்தில் வாகைகுளத்திலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்றுள்ளாா்.

தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பநாடு, முருகன்புரம் பகுதி அருகே வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இது குறித்து, முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.