ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:53 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாா் கூத்தங்குழி அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்(30) என்பவா் சுமை வாகனத்தில் 70 மூட்டைகளில் சுமாா் 3,150 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், பிரவீனை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை தேடி வருகின்றனா்.