ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க முன்னுரிமை: புதிய காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் புதிய காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி.

News image

காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி

Updated On :18 ஜூன் 2026, 2:32 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் புதிய காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி.

திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக புதன்கிழமை பொறுப்பேற்ற பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தின் மிகவும் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். இம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை முறையாகப் பராமரிப்பதற்கும், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும் அதிக கவனமும், முக்கியத்துவமும் அளிக்கப்படும. மாவட்டத்தில் எழும் எந்தவொரு சவாலையும் துணிச்சலுடன் எதிா்கொண்டு, காவல்துறை எப்போதும் முன்னிலையில் நின்று செயல்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.