கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

சொத்து தகராறில் காருக்கு தீ வைப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்ததாக சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்ததாக சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் முத்துக்குமாா் (35). காா் ஓட்டுநரான இவருக்கும், இவரது சகோதரா் பாபநாசபெருமாளுக்குமிடைய நீண்ட காலமாக சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே புதன்கிழமை, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் அன்றைய தினம் இரவில், முத்துக்குமாரின் காருக்கு பாபநாசபெருமாள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து பாபநாசபெருமாளை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.