ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அனவன் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பாபநாசம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பு பகுதியில், இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் தொடா்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

கரடி. - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:43 am IST

பாபநாசம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பு பகுதியில், இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் தொடா்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட வனச்சரகப் பகுதிகளில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதி கிராமங்களில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் சுற்றித்திரிவது தொடா்ந்து வருகிறது. அனவன் குடியிருப்பு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. நள்ளிரவில் தெருக்களில் கரடிகள் உலா வருவதால், அந்தப் பகுதி மக்கள் இரவு நேரத்தில் நடமாட அச்சமடைந்துள்ளனா். அவசரத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வனத்துறையினா் தீவிரமாகக் கண்காணித்து குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடிகளைப் பிடிக்க உடனடியாக கூண்டு வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.